ஒருவருடைய வாழ்வை
நிர்ணயிப்பது முன்ஜென்ம
கர்மவினை. இதையே
விதிபயன் என்றும்
சொல்கிறோம். ஒழுக்கம்,
மனிதாபிமானம், நேர்மை,
கலாசார கட்டுப்பாடு போன்றவை
ஒரு மனிதன் தன்
வாழ்நாள் முழுவதும்
கடைப்பிடிக்க வேண்டிய
விதிகள். இத்தகைய
விதிகளை அவன்
மீறும்போதுதான், சட்டவிதியை
மீறும்போது தண்டனைக்கு
ஆளாவது போல, நல்லவற்றை
செய்ய தவறிய காரணத்தால்
கொடும் தீவினை மனிதனை
ஆட்டிபடைக்கிறது. ஒரு
மனிதன் செய்கிற தீய
செயல்கள் ஒரு
கட்டத்திற்கு பிறகு
அவனை நோக்கியே திரும்பும்
என்கிறது சாஸ்திரம்.
அந்த சமயம் அந்த
தீய பலன்களை மனிதன்,
இந்த ஜென்மத்திலும் அனுபவிக்க்க்கூடும் அல்லது அடுத்து
வரும் பிறவிகளிலும் அனுபவிக்க்க்கூடும். இதைதான் விதி
என்கிறோம். முன்ஜென்ம
பயனாக ஒருவர் இந்த
ஜென்மத்தில் அனுபவிக்க
இருப்பது சுகங்களா?
அல்லது சோகங்களா? என்பதைதான்,
அவரவர் ஜாதக தசா-புக்தி விரிவாக எடுத்துக்காட்டுகிறது. “ஒரு காலத்தில்
அவன் எப்படி வாழ்ந்தவன்
தெரியுமா?. ஆனால்
இன்றோ தெருவில் நிற்கிறான்”
என்பார்கள். அதுபோல,
“ஒரு காலத்தில் அவன்
அடுத்த வேலை உணவுக்கு
கூட வழியில்லாமல் இருந்தவன்.
ஆனால் இன்றோ சமுதாயத்தில்
பெரிய மனிதாக நல்ல
அந்தஸ்தில் இருக்கிறான்”
என்பார்கள். இதில்
இருந்து என்ன
தெரிகிறது? எதிர்காலத்தில் யாருடைய வாழ்க்கை
நிலையும் இன்று
இருக்கும் இதே
நிலையில் இருப்பதில்லை.
அதனால்தான், “30 வருடம்
வாழ்நதவனும் இல்லை.
30 வருடம் தாழ்ந்தவனும் இல்லை.”
என்று சொல்வார்கள். அது
என்ன 30 வருடம்? சனியின்
சஞ்சாரத்தை கணகிட்டுதான்
நம்மவர்கள் அப்படி
சொல்லி வைத்தார்கள். சனி,
ஒரு இராசியில் இருந்து
புறப்பட்டு மீண்டும்
அதே இராசிக்கு வந்து
சேர 30 வருடங்கள் ஆகிறது.
அந்த 30 வருட காலகட்டத்திற்குள், ஒருவரின் வாழ்க்கையில்
எண்ணற்ற மாற்றங்கள்
நிகழ்கிறது. விண்வெளியில்
புதிது புதிதாக கிரகங்களை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வந்தாலும், யுகம்
யுகமாக ஜோதிட ரீதியில்
பலன் தரும் கிரகங்கள்
ஒன்பது. இதில் இராகு-கேது, கண்களுக்கு தெரியாத
சாயா கிரகங்கள். Bhakthi Planetஇந்த ஒன்பது கிரகங்களும்
நமது முன்ஜென்ம கர்மவினைக்கு
ஏற்ப இந்த ஜென்மத்தில்
பலன் தரும் பணியை
செய்கிறது. விதியை
மதியால் வெல்லலாம்
என்பது என்ன? ஒருவர்
துன்பத்தைதான் அனுபவிக்க
வேண்டும் என
விதி இருந்தால், தன்
மதியை பயன்படுத்தி துன்பங்களுக்கு நிவர்த்தி தேடி
அதை செய்து, அந்த
துன்பங்களில் இருந்து
பாதிப்பு இல்லாமல்
மீண்டு வருவதே, விதியை
மதியால் வெல்லலாம்
என்பதற்கு பொருள்.
நல்ல திசையை நோக்கி
ஒருவரின் புக்தி
செல்ல வேண்டும் என்றால்,
ஜாதகப்படி அந்த
நபருக்கு நல்ல
தசா-புக்தி நடைப்பெற
வேண்டும். ஒருவருக்கு
தசா-புக்தி பாதகமாக
இருந்தாலும் அதற்கேற்ப
எளிய பரிகாரம் செய்தால்,
பாதகமான தசா-புக்தியும் சாதகமாக
மாறும். அனைத்து இராசிகாரர்களும் அவரவர் ஜாதக
தசா-புத்திக்கு ஏற்ப
அந்தந்த கிரகங்களுக்கு வழிபாடு – பரிகாரம்
போன்றவற்றை தாராளமாக
செய்யலாம்.
சூரிய திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம்
ஞாயிற்று கிழமையில்
சூரியபகவானை வணங்க
வேண்டும். அன்றைய
தினம் சிகப்பு ஆடை
அணியலாம். கோதுமையால்
தயாரித்த உணவை
பசுவுக்கோ அல்லது
காக்கைக்கோ தர
வேண்டும். திங்கள்
கிழமையில் சிவ
வழிபாடு செய்வது
இன்னும் விசேஷம்.
மாணிக்கம் என்ற
ரத்தினத்தை வலது
கையில் மோதிர விரலில்
வெள்ளியில் செய்து
அணியலாம். சூரியனுக்கு
உகந்த காயத்திரி மந்திரத்தை
தினமும் 9 முறை
ஜபித்து வர
வேண்டும்.
சூரிய காயத்திரி
மந்திரம் ஓம்
அச் வ த்வஜாய
வித்மஹே பாச
ஹஸ்தாய தீமஹி தன்நோ
சூர்ய ப்ரசோதயாத்.
0 comments:
Post a Comment